• Jan 16 2026

மாஸ்டர் பீஸ் படங்களின் சொந்தக்காரர்... இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பிரமாண்ட சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா துறையில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பல படங்களை உருவாக்கிய பெருமை பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களையே சாரும். நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்கள் ஏராளம்.

68 வயதாகும் மணிரத்னம் இதுவரை இயக்கிய படங்களை கண்டு ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர்கள் பலர். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் என்கிற ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இயக்குனர் மணிரத்னம், சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஒரு படத்துக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதோடு சில படங்களில் ஷேரில் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார்.


இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

Advertisement

Advertisement