• Aug 03 2025

செல்வியிடம் தோற்றாரா கோபி..? இனியாவுக்கு வீட்டில் நடந்த ஆயுத பூஜை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த ஈஸ்வரி வீட்டில் வைத்தும் இனியாவுக்கு சரமாரியாக கிழிக்கின்றார். பாக்கியா எதுவுமே பேசாமல் கிச்சனுக்கு போய் தண்ணீர் குடித்துவிட்டு மேலே தனது ரூமுக்கு சென்று ராதிகா பேசியவற்றை நினைத்து அழுகின்றார்.

மறுபக்கம் செல்வியும் கோபியும் கலந்து கொண்ட போட்டியில் கோபி தான் வெற்றி பெறுகின்றார். இதனால் அங்கு உங்க பாக்கியா எங்கே?  தோத்து போயிடுவோம் என்று ஓடிப் போயிட்டாளா என்று கிண்டலாக பேச, அக்கா இனியாக்கு ஏதோ பிரச்சனை என்று தான் போயிட்டா என்று சொல்லிவிட்டு வருகின்றார் செல்வி.


வீட்டில் மாறி மாறி இனியாவுக்கு பேசிக் கொண்டு இருக்க அங்கு செல்வியும் வந்து தான் தோற்றுப் போய் விட்டதாக சொல்ல, பாக்கியாவும்  நானும் எல்லா விஷயத்தையும் தோற்றுப்  போய்விட்டேன் என்று சொல்லி அழுகின்றார்.

இதன் போது இனியா பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கவும் அவருக்கு கன்னத்தில் பளார் பளார் என அரைந்து, பாக்கியாவும் அவருக்கு கண்டபடி திட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement