• Jul 30 2026

நீ ஆணியே புடுங்க வேணாம்னு சொன்ன விஜயா.. மனோஜ் கேட்ட கேள்வி! ரோகிணி தலையில் விழுந்த சுமை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , பாட்டி சொன்னவாறே விஜயா மனோஜிடம் மாச மாசம் 50000 கொடுக்குமாறு சொல்லுகின்றார். அதற்கு பிறகு ரூமுக்குள் போன ரோகிணி மனோஜ்க்கு திட்ட, அங்கு வந்த விஜயா உங்க அப்பா கிட்ட சொல்லி காசு ரெடி பண்ணு என ரோகிணியிடம்  சொல்லுகிறார். ரோகிணியும் வேற வழி இல்லாமல் சரி என்று சொல்லுகிறார்.

இதன் போது மனோஜ் எல்லாம் உங்களால தான். நீங்க என்ன மட்டும் பெற்று இருக்கலாம் தானே என்று சொல்ல, பிரச்சனை அவனால இல்ல உன்னால தான் அன்று திட்டி விட்டு செல்கிறார் விஜயா.

அதன் பிறகு மீனா தோசை சுடச் செல்ல, பாட்டி புருஷன் பொண்டாட்டியா தோசை சுடுங்க என டாஸ்க் வைக்கிறார். எல்லாரும் சுட்டு முடித்த பிறகு மாறி மாறி ஊட்டி விடுமாறும் சொல்லுகின்றார். 


இதன் போது  விஜயா அண்ணாமலையை பார்க்க அவர் அவங்கதான் இளம் ஜோடிகள் நாம கிடையாது சாப்பிடு என்று பல்பு கொடுக்கிறார்.

இறுதியாக ஸ்ருதி வீட்டையே ரொமான்டிக் ஆக்கிட்டீங்க நீங்க லவ் மேரேஜா என்று கேட்க,  அடி போடி அம்மா என்று வெட்கப்படுகிறார் நாச்சியார் பாட்டி. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement