• Nov 09 2024

மாமனாருடன் நடிக்க வேண்டுமென்ற தனுஷின் ஆசை நிறைவேறியது! எந்த படத்தில் தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். வேட்டையன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் ரஜினிக்காக படத்தை பார்த்து வருகின்றார்கள்.

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளதோடு மேலும் ரித்திகா சிங், பகத் பாஸில், அமிதாப்பச்சன் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதன் காரணமாகவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 650 கோடிகளை வசூலித்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக இதன் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் நெல்சன் ஈடுபட்டு வருகின்றார்.


தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தனுஷ் நடிக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்ற தனுஷின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement