• Sep 18 2024

18 வயதுக்கு கீழ் தான் பெரும்பாலான ரசிகர்கள்.. அப்புறம் எப்படி ரூ.100 கோடி? விதிகளை மீறிய தியேட்டர்கள்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூலை நெருங்கி இருக்கும் நிலையில் தனுஷின் ரசிகர்கள் பெரும்பாலும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் நிலையில் இந்த படம் எப்படி 100 கோடி வசூல் செய்திருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மட்டுமின்றி பல தியேட்டர்களில் விதிகளை மீறி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமிகளை அனுமதித்து உள்ளதாகவும் விதிகளை மீறிய தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் ஐந்தே நாட்களில் ரூபாய் 97 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் இந்த படத்திற்கு ஓரளவு கூட்டம் இருந்தது என்றும், அதன்பின் தியேட்டர்களில் சுத்தமாக கூட்டம் இல்லை என்றும் எனவே ரூ.97 கோடி என்பது நம்பத்தகுந்த தொகை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் எனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’ராயன்’ திரைப்படத்திற்கு சிறுவர் சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை ‘ஏ’ சர்டிபிகேட் படத்திற்கு அனுமதித்தது தியேட்டர் நிர்வாகத்தின் குற்றமா? அல்லது பெற்றோர்களின் குற்றமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

எந்த படத்திற்கும் எல்லா வயதினரும் செல்லலாம் என்றால் எதற்காக சென்சார்? எதற்காக ஒரு சான்றிதழ் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement