தனுஷ் நடிப்பில் அக்டோபர் முதலாம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள நான்காவது படம் தான் இட்லி கடை. இந்த படத்தில் தனுசுடன் அருண் விஜய், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இட்லிக் கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இட்லி கடை முதலாம் திகதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இதுதான் இந்த படத்திற்கான சவாலாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், இட்லி கடை பட ப்ரோமோசனுக்கு மதுரை சென்ற தனுஷுக்கு, ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளதோடு அதில் ஒரு ரசிகர் வேல் கொடுத்துள்ளார். அதனை தனுஷும் அன்பாக வாங்கிய காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
சமீபத்தில் விஜய் தனது அரசியல் கட்சி பிரச்சாரத்திற்காக சென்ற இடத்தில் ரசிகர்கள் அவருக்கு வேல் கொடுத்திருக்கின்றனர். அதேபோல தற்போது தனுசுக்கும் வேல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!