கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. இவருடைய அசாத்தியமான பஞ்ச் டயலாக், கவுண்டர்களால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பற்றினார். அதே நேரத்தில் சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்தார். வசதி இல்லாத குழந்தைகளை படிக்க வைத்தார். மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்காக ஆம்புலன்ஸ் வண்டிகளை வாங்கி கொடுத்தார்.
மேலும் சமீபத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார். வசூலிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
எனினும் பாலா படத்தில் நடித்த பிறகு திடீரென பல சர்ச்சைகளில் சிக்கினார். இவர் சர்வதேச கைக்கூலி, இவரால் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து, வெளிநாட்டவர்களின் உதவியால் தான் மக்களுக்கு உதவி செய்கின்றார் என்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாலாவுக்கு எதிராக கிளம்பியுள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அவர் உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என ஆதவன் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவிக்கையில் , பாலா நல்ல பையன். ஆனால் அவனுக்கு எதிரா வரும் வதந்திகளுக்கு ஆதாரம் இல்லை. அவன் கொடுத்த வண்டிகள் யூஸ்டு. அதற்காக புகார் வருகிறது. அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களில் ஒன்று 1090 மாடல் மற்றொன்று 2016 மாடல்.
பாலா பணம் கொடுத்து வாங்கி இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் இரண்டாவது ஓனர் பெயர் மாறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி மாறாமல் இருக்கிறது. இது பற்றி ஆதாரத்தை பாலா வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Listen News!