தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவிமோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை சமீபத்தில் பிரிந்த நிலையில், தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் தனியார் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன்கள் உடன் சென்னை ஈசி ஆரில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தார். இந்த பங்களாவை ரவி மோகன் தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியுள்ளார். இதற்கிடையில் தான் ஆர்த்தி ரவி மோகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதனால் சொகுசு பங்களாவுக்கு செலுத்த வேண்டிய மாதாந்த கொடுப்பனவை தனியார் வங்கி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி அந்த பங்களாவை விட்டு ரவி மோகன் வெளியேறி, வாடகைக்கு வீடு பார்த்து தங்கி உள்ளார்.
இதனால் கடன் கொடுத்த வங்கி சார்பில் இஎம்ஐ செலுத்தும் படி ரவி மோகனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. முன்னதாக 2020ல் 2 கோடியும், 2021ல் ஐந்து கோடியும், 2022 இல் ஒரு கோடி ரூபாயும் லோன் எடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் ரவியின் சொகுசு பங்களாவில் இன்று வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மொத்தமாக 7 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை கடன் தொகையை செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸ் இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவி மோகன் அந்த வீட்டிற்கு செல்வதில்லை என்று கூறப்படுவதால், ரவிமோகனின் அலுவலகத்தில் இந்த நோட்டீசை ஒட்டி உள்ளனர்.
மேலும் கடனை கட்டத் தவறினால் சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதன் மூலம் ரவிமோகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரும் உடனடியாக வங்கிக்கான மாதாந்திர இஎம்ஐ செலுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த பங்களா தனியார் வங்கி வசம் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!