அஜய் ஜானமுத்து இயக்கத்தில் அருள் நிதி ,ஜோகிபாபு ,சிங்கம்புலி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய பயங்கர பேய் படம் டிமாண்டி காலனி அன்று 17 கோடி வரை வசூலித்து வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் மேலும் பிரிய பவானி ஷங்கர் ,அருண் பாண்டியன் ,அர்ச்சனா ஆகியோரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 85 கோடி வரை வசூலித்து வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இயக்குநர் படத்தின் மூன்றாம் பாகத்தினை எடுப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப் படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க பட உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜரோப்பியாவில் உள்ள மால்டா எனும் நாட்டில் எடுக்க தீர்மானித்துள்ளார்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மற்றும் அவர் லொகேஷனில் இருந்தே மீதி கதையினை எழுதி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!