• Feb 22 2025

லால் சலாம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை கொண்டாடும் லைகா ப்ரொடக்ஷன்ஸ்! செம ட்விட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளராக இயற்றிய திரைப்படம் தான் லால் சலாம்.


இதில் அவருடைய தந்தையான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதோடு மற்றும் பல முன்னணி நடிகர்கள், துணை நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அதன்படி, இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் நேற்று 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தத


இந்த நிலையில், லால் சலாம் படம் மிகச் சிறப்பாக விமர்சனங்களை பெற்றுள்ளதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருவதாக  லைகா நிறுவனம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.

இது குறித்து படத்தில் ரஜினியின் நடிப்பை பாராட்டி தன்னுடைய twitter பக்கத்தில் பேசியுள்ள லைகா ப்ரொடக்ஷன்ஸ், அவரது அதிரடியான மற்றும் அழுத்தமான கேரக்டரையும் பாராட்டி பதிவிட்டுள்ளது. 

இதேவேளை, ரஜினியின் அடுத்தப்படமான வேட்டையன் படத்தையும் லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement