• Jan 19 2025

சூப்பர் சிங்கரில் எமோஷ்னலாகி அழுத டிடி..! புதிரான காரணம்? வீடியோ இதோ....

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதினைப் பெற்றவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி.

திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த அரசி, செல்வி போன்ற சீரியல்களில் டிடி நடித்துள்ளார். பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி... என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 


இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது. அந்தவகையில் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டி, சர்வம் தளமயம், காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

திவ்ய தர்ஷினியின் சொந்த வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து கொண்டனர்.


இந்த நிலையில், நேற்று நடந்த சூப்பர் சிங்கர் ஷோவில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் டிடி. குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சூப்பர் சிங்கர் மேடையில் பிரபல பாடகர் பிரதீப் 'தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டுவரும்' என பாடலை பாட தொடங்கியதும் டிடி எமோஷ்னல் ஆகிவிட்டார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுது இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..


Advertisement

Advertisement