• Jan 19 2025

குடும்பத்துடன் தனது பிறந்தநாள் கொண்டாடும் ரஜனிகாந்த்... வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பிறந்ததினம் இன்று. பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் அவர்களும் தனது குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 


ரஜனிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார், வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார்.


ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதோ நின்றுவிடும், இப்போது நின்றுவிடும் என நினைத்தார்கள், ஆனால் 40 வருடம் தாண்டியும் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. ரசிகர்களின் வாழ்த்தும், கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறது என சந்தோஷமாக கூறியிருந்தார். 

டிசம்பர் 12, நடிகர் ரஜினியின் பிறந்தநாள், இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் சேர்த்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும்  பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 


Advertisement

Advertisement