• Apr 15 2026

அவங்க இரண்டு பேருக்கும் இது முதல் திருமணமா? கிங்ஸ்லி வாழ்க்கையில் நடந்தது என்ன? பயில்வான் பகீர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெல்சன் குமார் இயக்கத்தில் நயன்தாரா  நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து வந்தார்.


கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இவர்களின் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

'இவர்களது திருமண தகவலை அறிந்து அவருக்கு கால் எடுத்தேன். அவரும் நாங்க  நீண்ட நாட்களாக காதலிச்சு வந்தோம், அவரும் என்னை திருமணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டே இருந்தா..அதனால திருமணம் செய்து கொண்டேன் என்றார்.


எனினும், ரெடின் கிங்ஸ்லிக்கு 46வயசு ஆவதால், இது தான் முதல் திருமணமான என்று பேச்சு வருகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இது முதல் திருமணம் தான்.

ரெடின் கிங்ஸ்லி ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலிச்ச நிலையில், அவர்கள் பல ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள்' என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement