நடிகர் மற்றும் தொகுப்பாளராக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள தாடி பாலாஜி, நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி உருக்கமாகப் பேசினார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவதுஎத்தனையோ பேர் வாழ்க்கையில் உயர்ந்த பிறகு பழைய நட்புகளையும் நினைவுகளையும் மறந்துவிடுவார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி இல்லை. "நான் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தொகுத்துக்கொண்டு இருந்தபோது, அதில் நான் சொன்ன ஒரு பன்ச்சை கேட்டு, நைட் 11 மணிக்கு எனக்கு போன் பண்ணி பாராட்டினார். இதுபோல மனித நேயத்தோடு நடந்துகொள்ளும் ஒருவரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை."
தாடி பாலாஜி மேலும் தெரிவித்தார், "இத்தனை வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் சிவகார்த்திகேயனைப் போன்ற மனமுள்ள மனிதரை சந்தித்ததில்லை. அவரின் நல்ல மனசுக்காகவே என் வாழ்நாளை முழுமையாக வேண்டிக்கொண்டு, அவர் வாழ்வில் நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்," என உணர்ச்சி மிகுந்து கூறியுள்ளார்.
Listen News!