2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் ஃபேர்ப்ளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற வியாகாம் நிறுவனம் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஃபேர்ப்ளே செயலியில் விளம்பரப்படுத்திய பிரபலங்களை நேரில் வரவழைத்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தார்கள் .
அதன்படி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிராம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவர் இந்தியாவில் இல்லை என்றும் அதற்கு பதிலாக இன்னொரு தேதியை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை தொடர்பில் ஏப்ரல் 29ஆம் தேதி நடிகை தமன்னாவை போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சைபர் கிராம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக காணப்படும் தமன்னாவை போலீஸ் விசாரணைக்கு அழைத்த விடயம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Listen News!