• May 03 2026

எனக்கு நான்தான்டா போட்டி! அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் இரண்டு அஜித் படங்கள்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாகவே  முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரண்டும் ஒரே நாளில் வெளியாகி பரபரப்பை ஏற்றப்படுத்தியது.


இவ்வாறு உள்ள நிலையில் அஜித்தின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்யும் கலாச்சாரம் வைரலாகும்  நிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அஜித்தின் மங்காத்தா மற்றும் பில்லா இரண்டும் ஒரே நாளில் ரீரிலீஸ் ஆக உள்ளது.


வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது விஸ்ணுவரதன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த பில்லா திரைப்படமும் இதே நாளில் 140 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அஜித்தின் பிறந்த தினம் மே 1 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement