வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் வழங்கிய பேட்டி இணையதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுமாறும் அடுத்த 9வது சீசன் நடத்தப்படக்கூடாது என்றும் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தை பார்க்கச் சென்று உயிரிழந்த பெண் தொடர்பிலும் அல்லு அர்ஜுன் தொடர்பிலும் பேசிய கூல் சுரேஷ், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை குத்திக் காட்டியும் பேசியுள்ளார். தற்பொழுது அவர் தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
அதன்படி அவர் கூறுகையில், புஷ்பா 2 படத்தை பார்க்கச் சென்று பெண்ணொருவர் உயிரிழந்தார். அவருடைய மகனும் முளைச் சாவடைந்து இருந்த செய்தியை நான் அறிந்தேன்.
d_i_a
அந்த படத்தின் நடிகராக அல்லு அர்ஜுன் இந்த விவகாரத்தில் சிக்கி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு பல பிரபலங்களும் அவரை முந்தியடித்து நேரில் போய் பார்த்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தை யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தற்போது அந்த குடும்பத்தின் வம்சமே அழிந்து விட்டது. இதற்கு யார் பதில் சொல்லுவார். அந்த குடும்பத்துக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் பண்ணியே ஆக வேண்டும். ரசிகர்கள் கொடுக்கும் செல்வாக்கினால் தான் நீங்கள் இன்று தனியார் விமானத்தில் செல்லுகின்றீர்கள், காரை செல்லுகின்றீர்கள், கோவாவுக்கு செல்லுகின்றீர்கள். ரசிகர்கள் இல்லை என்றால் இந்த செல்வாக்கு உங்களுக்கு இருக்காது.
ஆகவே எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சரி அது ரஜினி சார், கமல் சார், அஜித் சார், விஜய் சார் ஏன் கூல் சுரேஷா இருந்தாலும் கூட நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எனவே உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்தை தெலுங்கு நடிகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார் கூல் சுரேஷ்.
Listen News!