• Dec 19 2024

உலக நாயகனுக்காக ஷங்கர் எடுக்கும் ரிஸ்க்.. இந்தியன் 3 பற்றி கொடுத்த வாக்குறுதி படுவைரல்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் படம் வெளியானது. இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த காலத்திலேயே இந்தியன் திரைப்படம் 50 கோடிகளை வசூலித்து இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் பல இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் படம் பார்க்க சென்றார்கள்.

d_i_a

எனினும் இந்தியன் 2 பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதன் காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இது உலக நாயகன் கமலஹாசனுக்கு மட்டும் இல்லாமல் பிரபல  இயக்குனராக காணப்படும் ஷங்கருக்கும் பேரிடியாக இருந்தது.


இந்தியன் இரண்டாவது பாகத்தின் தோல்வி இந்தியன் 2 படத்தின் ரிலீஸ்க்கு தடையாக மாறியது. இதனால் இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாகவே ஓடிடியில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்றது.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் வழங்கிய பேட்டியில் இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியை கொடுத்தன. அதை கருத்தில் கொண்டு இந்தியன் 3 திரைப்படத்தை சரி செய்வேன். இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement