• Jan 18 2025

ரக்சனை விட எனக்கு பாதி சம்பளமா? சேனல் நிர்வாகத்திடம் சண்டை போட்டாரா மணிமேகலை?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரது சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் நான்கு சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்குவதில் சில குழப்பம் ஏற்பட்டது. முதலில் இந்த சீசனில் இருந்து விலகுவதாக நடுவரில் ஒருவரான வெங்கடேஷ் பட் கூறிய நிலையில் அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விலகினர். 

இதனை அடுத்து தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் நடுவர்களாக நியமனம் செய்யப்பட்ட நிலையில் ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுப்பாளர்களாகவும் குரேஷி, சுனிதா, புகழ், ராமர் உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் பங்கேற்க இருப்பதாக ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின. 

இந்த நிலையில் தொகுப்பாளர்களான ரக்சன் மற்றும் மணிமேகலைக்கு ஒரு எபிசோடுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல் கசிந்து உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வரும் ரக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு இரண்டு லட்ச ரூபாய் மணிமேகலைக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனக்கு மட்டும் ரக்சனை விட பாதி சம்பளமா என சேனல் தரப்பிடம் மணிமேகலை சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே ரக்சனுக்கு ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்திற்கு 50 லட்சம் சம்பளம் கிடைத்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘மறக்குமா நெஞ்சம்’ படத்திற்கு 70 லட்சம் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சம்பளம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement