• Jan 18 2025

நல்லா அள்ளி அள்ளி சாப்பிடுங்க மாப்ள... சரத் குமார் வீட்டில் இந்திரஜாவுக்கு கொடுக்கப்பட்ட ராஜவிருந்து!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரோபோ சங்கரின் மகளான இந்திராஜாவின் திருமணம் தான் மிகவும் ட்ரெண்டிங்கில்காணப்படுகிறது. 

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகளே இந்திரஜா. இவர் நீண்ட நாளாக அவரது தாய் மாமனை காதலித்து வந்த நிலையில்,  இரு வீட்டாரின்  விருப்பத்துடன் மிகவும் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. . 

தமிழ் திரையுலகமே வியக்கும் அளவிற்கு தனது மகளின் திருமணத்தை நடத்திக் காட்டி இருந்தார் ரோபோ சங்கர். திருமண பேச்சு ஆரம்பித்தில் இருந்து தற்போது வரை இவர்களின் குடும்பம் தான் சமூக வலைத்தளங்களை கவர்ந்துள்ளது.


இது தொடர்பான காணொளிகள் வைரலாகவும், இந்த வயசில் ரோபோ சங்கருக்கு இந்த ஆட்டம் தேவையா? பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம்  சாதாரணமா கல்யாணம் பண்றாங்க இவங்களுக்கு என்ன காசுத் திமிரா? என  பல விமர்சனங்களும் குவிந்தன.


ஆனாலும், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது பாராட்டுகளை திருமண தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சினிமா பிரபலமும் தனது கட்சியை பா.ஜ.க கட்சியுடன் இணைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், இந்திரஜாவுக்கு தடபுடலாக திருமண விருந்து கொடுத்துள்ளார்.


அவர்களின் திருமணத்தை மகிழ்விக்கும் விதமாக சரத் குமாரும், ராதிகாவும் இணைந்து தங்களது வீட்டிற்கு அழைத்து இந்திரஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விருந்தளித்துள்ளார்கள்.

இதன்போது, அவர்களுடைய காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கியுள்ளது இந்திரஜா ஜோடி.  இதுதொடர்பான காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement