நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமும் உருவாகி வருகின்றது.
ஜெயிலர் படத்தின் முதலாவது பாகத்தில் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் நடித்த நிலையில், இரண்டாவது பாகத்திலும் அவர்களுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், எஸ். ஜே சூர்யா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல்களும் வெளியாகின.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கேரளாவில் நடைபெறும் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றார். அவரை காண்பதற்காக கேரள மக்கள் நள்ளிரவில் இருந்து காத்துக் கொண்டிருந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில் , அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார் ரஜினி காந்த்.
தற்போது இந்த தகவல் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்த் திரையை சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜெயிலர் படத்தை போலவே இதன் இரண்டாவது பாகமும் மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!