தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் பிரபலமான பாடல் ‘வீரா ராஜ வீர’ மீது எழுந்திருந்த காப்புரிமை குற்றச்சாட்டு மற்றும் அதனையொட்டி வெளியான ₹2 கோடி செலுத்தும் உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கு, தமிழ்த் திரை இசை உலகிலும், இந்திய இசைத்துறையிலும் கவனத்தை ஈர்த்த முக்கியமான கலாசார உரிமைத் தகராறாக உருவெடுத்திருந்தது.
வசிபுதின் என்பவர், தன்னுடைய தந்தையின் ‘சிவ ஸ்துதி’ பாடலை வைத்து ‘வீரா ராஜ வீர’ பாடல் அமைக்கப்பட்டதாக கூறி, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு முன்வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஏ.ஆர்.ரகுமான் 2கோடி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தற்பொழுது டெல்லி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
Listen News!