தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.
அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங் தீவிரம் காட்டி வரும் இவர், 'அஜித் குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கினார். இந்த கார் ரேசிங் அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளின் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வெற்றி பெற்றன.
தற்போது இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் தனது ரேசிங் கார் மீது 'இந்திய சினிமா' லோகோவை பொறிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கார் பந்தயப் போட்டியின் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித் குமார் தன் குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், தன் பின் தொடர்பவர்களுக்கு மேடை ஏறி போதிக்காமல் செயல்களால் முன்னுதாரமாக இருப்பவர் அஜித் குமார் தான் என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!