விஜய் டிவியில் சாதாரண கலைஞர்களாக பங்கு பற்றி, இன்று வெள்ளித்திரையில் ஜொலிப்பவர்கள் பலர். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் என இவர்களுடைய வரிசையில் வந்தவர் தான் புகழ்.
சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யார் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதனால் புகழுக்கு தமிழக மக்களிடையே தனி வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து சினிமாவிலும் நடிகராக களம் இறங்கினார். யானை, அயோத்தி, வீட்டில் விசேஷம், 1947 போன்ற படங்களில் நடித்தார். மேலும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.
இவர் நகைச்சுவை நடிகராக, கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் நடித்துள்ளார். இவரை காமெடியனாக பார்த்து தற்போது வில்லனாக பார்ப்பது வித்தியாசமாக இருந்தாலும் அவருடைய நடிப்பு ரசிகர்கள் இடையே நல்ல கருத்துக்களை பெற்றது.
இந்த நிலையில், விஜய் டிவி புகழ், தனது மகள் ரிதன்யாவுக்கு இரண்டாவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!