• Sep 29 2025

வாங்க வாங்கன்னு கம்பளம் விரிச்சு கூப்பிட்டியே.! விஜயை தரக்குறைவா பேசிய சுசி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் பங்கு பற்றிய 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.  இதனால் விஜய்க்கு எதிராக  கடுமையான மனநிலை மக்களிடையே தோன்றியுள்ளது.    

தவெக தலைவர் விஜய் நேற்று இரவு சுமார் ஏழு மணி அளவில் கரூருக்கு சென்றபோதுதான் இந்த சோக நிகழ்வு அரங்கேறியது.  விஜயை பார்க்க  நெருங்கிய ஆயிரக்கணக்கான மக்கள், கூட்ட நெரிசலில்  நிலை தடுமாறினர்.  


சம்பவ இடத்திலேயே சுமார் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விஜய் அங்கிருந்து சென்ற பிறகு பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மேலும் 12 பேர் உயிரிழந்தனர். 

மொத்தமாக 41 பேரின் உயிர்கள் இந்த பேரணியில் பலியானது. இது தொடர்பில் விஜய் மீதும்  பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.,

இந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பில் விஜயை பற்றி மிக மோசமாக விமர்சித்துள்ளார் பாடகி சுசித்ரா. தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு சுசித்ராவின் இந்த தரக்குறைவான பேச்சுக்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 



 

Advertisement

Advertisement