• Oct 13 2024

பாரில் குடித்து புலம்பிய செழியன்.. சந்தோஷத்தில் கோபி..!! சிக்கிய இனியா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா ரூமில் இருந்து சத்தமாக பாட்டு போட்டு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுகின்றார். இதனை ஜெனி பார்த்து விடுகின்றார். ஆனாலும் ஒன்றும் கேட்காமல் கீழே வர ஈஸ்வரி மேலே என்ன சத்தம் என்று கேட்கின்றார்.

அதற்கு ஜெனி சமாளித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த இனியா தான் படித்துக் கொண்டிருப்பதாக சொல்லுகின்றார். மீண்டும் இனியா டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவரது தோழி போன் பண்ணுகிறார் என்னை நீ பண்ணிட்டு இருக்க என்று சொல்ல நான் டான்ஸ் ஆடிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் இன்னும் செலக்ட் ஆகல அதுக்குள்ள ப்ராக்டிஸ் பண்றியா என்று கேட்க நான் செலக்ட் ஆயிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பிராக்டிஸ் பண்ணனும் போன வை என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.

அதன் பின்பு பாக்கியா இனியா டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதை பார்த்து விடுகின்றார். ஆனாலும் இனியா வேறு காரணங்கள் சொல்லி சமாளிக்க பார்க்கின்றார்.


இதைத்தொடர்ந்து கோபி ரெஸ்டாரண்டில் இருக்க அவர் அனுப்பி வைத்த செப்  பாக்கியா தனக்கு வேலை தந்து விட்டதாக சொல்கின்றார். இதனால் கோபி சந்தோஷப்படுகிறார். ஆனாலும் அவருடைய நண்பர் பாக்கியா பாவம் என அட்வைஸ் பண்ண, அவருக்கும் பேசுகின்றார்.

இறுதியில் அவர்கள் இருவரும் கிளம்பி வரும்போது செழியன் தனியாக இருந்து குடித்து கவலையாக இருப்பதை பார்த்து விடுகின்றார். அதன்பின்பு என்ன பிரச்சனை என்று செழியனிடம் கோபி கேட்க, தனக்கு வேலை போயிடுமோ என்ற பயமா இருக்கின்றது என்று சொல்லி புலம்புகின்றார். ஆனாலும் இந்த வேலை போனால் என்ன தான் வேறு வேலை எடுத்து தருவதாக கோபி நம்பிக்கை கொடுக்கின்றார். பிறகு கோபி செழியனை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் விடும்போது பாக்கியா பார்க்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement