பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருந்த நிலையில், அவர் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதன்போது குழந்தையை கையில் வாங்கிய இந்திரஜாவின் கணவர் கார்த்திக் சந்தோஷத்தில் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக காணப்பட்டது.
ரோபோ சங்கரின் ஒரே ஒரு மகளான இந்திரஜா விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்தார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அதற்கு பிறகு தனது தாய் மாமனான கார்த்திகை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.
d_i_a
இந்திரஜாவின் திருமணம் பலரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்தபோதும் அவற்றையெல்லாம் கடந்து என்று ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். மேலும் சமீபத்தில் இவருடைய வளைகாப்பும் மிகப் பிரம்மாண்டமாகவே நடைபெற்று இருந்தது.
ரோபோ சங்கர் தனக்கு பேரன் தான் பிறக்கும் என கூறி வந்த போது, ரோபோ சங்கரின் மனைவி தனக்கு பேத்தி தான் வேணும் என கூறிய பேட்டியும் இணையத்தில் வைரலாக இருந்தது. தற்போது இந்திரஜா ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் மொத்த குடும்பமும் எமோஷனலாகி கண்கலங்கிய தருணம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இந்த நிலையில், இந்திரஜாவின் குழந்தையை பார்ப்பதற்காக முதல் முதலாக சின்னத்திரை பிரபலம் ஆன நாஞ்சை விஜயன் தனது குடும்பத்தோடு சென்றுள்ளார். தற்போது அவர் தனது மருமகனே என இந்திரஜாவின் குழந்தையை தூக்கி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது
Listen News!