• Feb 27 2025

சிம்ரனுக்கே சாலஞ்ச் விட்ட குட்டி சிம்ரன்.. விருது விழாவில் நடந்த சுவாரஸ்யம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

90 ஆம் ஆண்டுகளில் பலரது கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் சிம்ரன். இவர் விஐபி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமலஹாசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் கலக்கியவர் தான் சிம்ரன். இவர் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய நடனம் இன்னும் யாராலும் மறக்க முடியாது. மேலும் நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட், கோபம் உள்ளிட்ட அத்தனை சிறப்பாக காட்டக்கூடிய நடிகை.

d_i_a

சிம்ரனுக்கு தற்போது 48 வயதான போதிலும் அவர் இளமை தோற்றத்திலேயே காணப்படுகின்றார். தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகின்றார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.


மும்பை சேர்ந்த சிம்ரன் தீபக் பக்கா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் இறுதியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சிம்ரன் வில்லி கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

அவள் விகடன் சார்பில் எவர்கிரீன் நடிகைக்கான விருதை அண்மையில் சிம்ரன் பெற்றுள்ளார். குறித்த விருதை தயாரிப்பாளர் தானுவும் இயக்குநர் வசந்தும் வழங்கி வைத்துள்ளனர். 


இந்த நிலையில், குறித்த விருது விழாவில் சிம்ரனின் குட்டி ரசிகை ஒருவர் சிம்ரன் நடித்த படங்களில் அவர் ஆடிய பாடல்களுக்கு ஸ்டேப் போட்டு காட்டி அதனை கண்டுபிடிக்குமாறு சிம்ரனுக்கு சவால் விட்டுள்ளார்.


குட்டி ரசிகையின் இந்த கோரிக்கையை ஏற்ற சிம்ரன் அவர் ஆடி காட்டிய ஸ்டேப்களுக்கான பாடல்களைச் சொல்லி அசத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement