விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 பழைய போட்டியாளர்கள் வருகையால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரு சுவாரஷ்யமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு எலிமினேஷன் ஆகி வெளியேறிய பழைய போட்டியாளர்கள் வந்ததை தொடர்ந்து இன்று இன்னுமொரு போட்டியாளர் உள்ளே வந்துள்ளார். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேஷன் ஆகி வெளியேறிய தர்ஷிகா தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.
போட்டியாளர்கள் அனைவரும் அவரை கட்டியணைத்து வரவேற்றனர். அவர் வருவதை கண்ட விஷால் அதிர்ச்சியாக ஆகி நிற்கிறார். எல்லோருடனும் பேசிய தர்ஷிகா விஷாலிடம் வந்து கையை மட்டும் குலுக்கிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.
இன்னொரு பக்கம் ரவீந்தர் "விஷால் பெயரை டேமேஜ் பண்ணிட்டிங்க" என்று சொல்கிறார். அதற்கு தர்ஷிகா "நான் அவர் பெயரை டேமேஜ் பண்ணவில்லை, எனக்கு தோணிச்சி அது சரியில்லைன்னு எனக்கு தெரியும் நான் என்ன பண்ணுனேன்னு. என் கூட இருந்தவர்களுக்கு தெரியும் நீங்க என் வாழ்க்கைக்குள்ள வர தேவையில்ல" என்று சொல்கிறார்.
அதே நேரம் ரவீந்தர் "எதுக்காக விஷாலை எல்லாரும் அடிக்கிறாங்க நீ வெளிய ஒன்னு பண்ண அதுனாலத்தான் அடிக்கிறாங்க. நீ முதல்ல அப்படி பேசி இருக்க கூடாது நாடகம் ஆடவேணாம்" என்று சொல்கிறார். கோபமடைந்த தர்ஷிகா "அதை பற்றி நீங்க பேச தேவையில்லை. இது எனக்கும் அவனுக்கும் இடையில உள்ளது நீங்க வராதீங்க. உங்க நாடகம் மாதிரி இல்லை" என்று கோபமாக கத்துகிறார்.
Listen News!