தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த இவர், தற்போது பலரும் வியக்கும் வண்ணம் மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் காமெடியனாக நடித்தார். அதை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்திலும் ஹீரோவாக நடிக்க வைத்த தனுஷ் அந்தப் படத்தில் அவருடைய வாழ்வில் சிறந்த திருப்புமுனையை உருவாக்கி கொடுத்தார். இது அவருடைய முதலாவது வெற்றி படமாகவும் அமைந்தது.
அதன் பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மான் கராத்தே, ரெமோ போன்ற படங்களில் நடித்து சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிங் ஆகவும் உயர தொடங்கினார்.
இறுதியில் அமரன் படத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த சிவகார்த்திகேயன் அவராகவே வாழ்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றார். இந்த படம் 350 கோடிகளை கடந்து மாபெரும் வெற்றி கண்டது.
இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏதாவது ஒரு சர்ச்சை படத்தில் நடித்து மாஸ் ஹீரோ ஆகிவிடலாம் என்ற திட்டத்தில் தான் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை தேர்ந்தெடுத்து இருப்பதாக சர்ச்சை கருத்தொன்றை தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய கருத்து சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!