விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது. எனினும் இந்த சீரியல் ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஏற்கனவே பாக்கியா கோபியை விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது ராதிகாவும் கோபியை விவாகரத்து பெற்று சட்டரீதியாக பிரிந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பாக்கியலட்சுமி குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றும் முடிவுக்கு வந்துள்ளது. எழில் நினைத்தது போலவே படத்தின் டைரக்டர் ஆகிவிட்டார். பாக்கியாவும் இன்னொரு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து தனது கனவை வலுப்படுத்தியுள்ளார். இவ்வாறு இந்த சீரியல் தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சுசித்ரா தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த தகவல் பாக்கியாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி சிந்து பைரவி என்ற கன்னட சீரியலில் சுசித்ரா நடிக்க உள்ளார். சன் நெட்வொர்க்கின் கன்னட சேனல் ஆன உதயா டிவியில் தான் அந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஆடுகளம் என்ற புதிய சீரியலின் கன்னட ரீமேக் தான் சிந்து பைரவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!