சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், அருண் வீட்டுக்கு சென்ற சீதா அவருடைய அம்மாவை பார்க்கின்றார். இதன் போது அருண், ஒரு ரவுடி என்னை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவிட்டதால் எனக்கு மூன்று நாள் சஸ்பென்ஸன் ஆர்டர் போட்டு இருக்கு என்று சொல்லி கோபப்படுகின்றார்.
அதற்கு சீதா உங்களுக்கு யார் இப்படி பண்ணியது என்று விசாரித்துவிட்டு நீங்க தானே அம்மா கூட இருக்க முடியல என்று பீல் பண்ணிட்டு இருந்தீங்க.. இந்த மூன்று நாளும் அம்மா கூட இருந்து டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என்று சொல்லுகின்றார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து ஸ்வீட் எதுவும் பண்ணலையா என்றும் கேட்டு அருணை மாட்டி விட்ட சம்பவத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். இதை கேட்ட மீனா அவர் மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்தினார் என்றால் யாருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை நீங்களே இப்படி பண்ணுனீங்க என்று திட்டுகின்றார்.
அதன் பின்பு மீனாவுக்கு கார் ஓட்டுவதற்கு பழகிக் கொடுக்கின்றார் முத்து. இதன்போது மீனா பயத்தில் சரியாக கார் ஓட்டாத நிலையில் முத்து அவர் மீது கோபப்பட்டு திட்டுகின்றார்.
இதனால் இப்படித்தான் கார் பழக வாரவங்களுக்கு திட்டுவீங்களா என மீனாக் கேட்க, அதற்குப் பிறகு காரை மெதுவாக ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்கின்றார் முத்து. இடையில் வந்த ஸ்ருதி மீனா கார் ஓட்டும் அழகை போட்டோ எடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!