• Nov 23 2025

அடுத்தடுத்து ரோகிணிக்கு வந்த பிளாக்மெயில்..? வீட்டில் உள்ளவர்கள் எடுத்த முடிவு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டில் பாம்பு வந்த விஷயத்தை பார்வதி, சிந்தாமனியிடம் சொல்ல, அவர்கள் இது தெய்வ குற்றம், இதனால் வீட்டில் பிரச்சினை வரும், சண்டை வரும் என்று பயமுறுத்துகிறார்கள். இதற்கு குலதெய்வம் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்யுமாறு சொல்லுகிறார்கள்.

இதனை வீட்டில் உள்ளவர்களிடம் விஜயா சொல்லுகிறார். மேலும் எல்லாரும் செல்ல வேண்டும் என சொல்ல, முதலில் மனோஜ், ஸ்ருதி, ரவி தயங்குகின்றனர். பிறகு இதன் சாட்டாக தீபாவளியை பாட்டி ஊரில் கொண்டாடலாம் என்று சொல்ல சம்மதிக்கின்றனர்.

அந்த நேரத்தில் முத்து, எனக்கும் ஒருத்தங்க வீட்டில் பாம்பு வந்தால் ஒரு ரகசியம் வெளியே வர போகுது என்று அர்த்தம் என்று சொன்னாங்க, அப்படி யாருக்கும் ஏதும் ரகசியம் இருந்தால் சொல்லுங்க என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.


இதை தொடர்ந்து ஸ்ருதியின் அம்மா, ரோகிணிக்கு கால் பண்ணி பணத்தை கேட்க, அவர் கொஞ்சம் டைம் தருமாறு சொல்ல, இந்த விஷயத்தை உன்னுடைய வீட்டில் சொல்லி விடுவேன், பிறகு உன் மாமியார் என்ன பண்ணுவாங்க என்று தெரியும் தானே என அவரும் ரோகிணியை மிரட்டுகிறார்.

ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு கோகிலா அவருடைய நண்பியுடன் வர, அங்கு மீனாவும் பழக் கூடையுடன் வருகிறார். அதனை ஸ்ருதி முன்பக்கத்தில் ஷோவ்க்கு வைக்கின்றார். பின் அதனை பற்றி கோகிலா மீனாவிடம் விசாரித்ததோடு, அவருடைய நண்பியிடம் மீனா, முத்து பற்றி சொல்லுகிறார்.

மேலும் அவருடைய நண்பி அப்பார்ட்மெண்ட் வைத்துள்ளதால் அங்கு உள்ளவர்களுக்கும் பூ கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.  அந்த நேரத்தில் அவர், நாங்க வீடு மட்டும் இல்லை வீட்டுக்கு தேவையான பொருட்களும் கொடுக்கிறோம், அதனை வாங்க வேண்டும் என்று சொல்ல, மீனா உடனே அந்த ஆர்டரை மனோஜ்க்கு கொடுக்குமாறு சொல்லுகிறார்.

இறுதியில் இதனை அவதானித்த ஸ்ருதி, ரோகிணி, மனோஜ் உங்களுக்கு நல்லது நினைக்கிறது இல்ல. ஆனா நீங்க உண்மையிலே நல்லவங்க என்று சொல்ல, இந்த விஷயம் யாருக்கும் சொல்ல வேணாம் என்று மீனா சொல்லுகிறார். இதான் இன்றைய எபிசோட்.


 

Advertisement

Advertisement