• Jan 19 2025

பிக் பாஸ் வின்னர் அர்ச்சனாவுக்கு லம்பாக அடித்த ஜாக்பாட்! வியக்கவைக்கும் சம்பள விபரம் இதோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் 5 இறுதிப் போட்டியாளர்களாக தினேஷ், விஷ்ணு, மணிச்சந்திரா, மாயா கிருஷ்ணன் மற்றும் இவர்களில் விஜே அர்ச்சனா பிக் பாஸ் தமிழ் 7 இல் மிகவும் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் டைட்டில் வின்னரை அர்ச்சனா தான் தட்டிச் சென்றார் என்ற தகவல்கள் உறுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த விஜே அர்ச்சனாவின் சம்பள விபரம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதாவது, பிக் பாஸ் வீட்டிற்கு 35 நாட்கள் கழித்து இடையில் வந்த அர்ச்சனாவுக்கு, ரூ 2.25 லட்சம் பேசப்பட்டுள்ளதாம்.

இதைப் பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், அவர் பிக் பாஸில் வெற்றி பெற்றதன் மூலம், மேலும் அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையையும் சேர்த்து வீட்டிற்கு எடுத்துச் செல்வார். ஆகவே இது மொத்தமாக பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement