• May 03 2024

வசூல் வேட்டையில் கோடிகளைக் குவிக்கும் கேப்டன் மில்லர்!2ம் நாள் வசூல் விபரத்தை வெளியிட்ட பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கேப்டன் மில்லர். 

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடந்ததை எடுத்துக் காட்டுகின்றது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.



இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாவது நாள் வசூல் விபரம்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படம் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்வரை வசூல் செய்யப்பட்டது.



எனினும், இதன் படத்தின் இரண்டாவது நாளில் 6.65 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. 

ஆகமொத்தம் கேப்டன் மில்லர் இரண்டு நாட்கள் முடிவில் 14லிருந்து 15 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement