• Jan 16 2026

Bigg Boss Tamil 7 வெற்றியாளர்களுக்கான வெகுமதியும் பரிசுத் தொகையும்? சஸ்பென்ஸ் வைக்கும் பிக் பாஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்று தான். அதன்படி, பிக் பாஸ் வீட்டில்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என அதிகார்வப்பூர்வமான தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, இரண்டாவது இடத்தை மணி சந்திராவுக்கும், மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது. எனினும், தினேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் வாக்குகள் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, பிக்பாஸ் தமிழ் 7 வெற்றியாளருக்கு அவர்களின் மொத்த ஊதியத்துடன் சேர்த்து ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முன்னர் இடம்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுக்கு புத்தம் புதிய காரை வழங்கியிருந்தாலும், இது பிக் பாஸ் தமிழ் 7 சாம்பியனுக்காகும் தொடருமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


இருப்பினும், முதல் ரன்னர்-அப்க்கு எந்த பரிசுத் தொகையையும் கிடைக்காது, ஆனால் அவர்களது ஊதியத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை,  இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7இல், இறுதி வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகையிலும் ஏதும் சஸ்பென்ஸ் இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  

Advertisement

Advertisement