• Mar 26 2026

புதிய சீரியலில் நடிக்க கமிட்டான சிறகடிக்க சீரியல் நாயகி!ஆனாலும் அதிலொரு டுவிஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இதில் நாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியா தொடர்பில் சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

விஜய் டிவியின் 'வேலைக்காரன்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை தான் கோமதி ப்ரியா. இதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.


அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது  நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாளத்திலும் ஒரு புதிய தொடர் கமிட்டாகியுள்ளாராம் கோமதி பிரியா.

தற்போது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Advertisement

Advertisement