• Dec 02 2024

பிக் பாஸ் சனம் ஷெட்டி போட்ட ஒரே ஒரு ட்விட்! பதறியடித்து அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்த நெட்டிசன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நடிகை ராஷ்மிகா, ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகளின் மோசமான வீடியோக்கள் வெளியாகி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தீர்வு கட்டவேண்டும் என்று பல்வேறு நடிகர் சங்கம், மகளிர் சங்கம் என்பன மும்முரமாக செயற்பட்டது.

இந்த நிலையில், நடிகை சனம் ஷெட்டிக்கு நெட்டிசன் ஒருவர் டீப் பேக் வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததையடுத்து,  சனம் ஷெட்டி அவருக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார்.


அதன்படி, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயற்பட்டு வருபவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பில், அதில் பங்கு கொண்ட போட்டியாளர்கள், சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பவை தொடர்பில் நடுநிலையாக விமர்சனங்களை கூறுபவர்.


இவ்வாறான நிலையில்,  சனம் ஷெட்டியின் டீப்பேக் வீடியோவை வெளியிடுவேன் என நெட்டிசன் ஒருவர் மிரட்டி உள்ளார். 

இதனை அடுத்து அதிரடியாக அந்த நபருக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நீ எப்படி தலையிடலாம், உன்னை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த நபர் தனது அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு அக்கவுண்ட்டையும் டிஆக்டிவேட் செய்து ஓடிவிட்டார்.


Advertisement

Advertisement