• Jan 19 2025

தனது நிஜக் கணவரை முதன்முறையாக அறிமுகப்படுத்திய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை! ட்ரெண்டாகும் போட்டோஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் பெயர் தான் சல்மா அருண்.

இவருக்கு திருமணம் முடித்து ஒரு குழந்தையும் இருக்கின்றது. இவர் நிஜத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அதன்படி இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தானாம். சென்னையில் தனது படிப்பை முடித்த இவர், மாடலிங் பண்ண வேண்டும் என ட்ரை பண்ணி உள்ளார். 

அந்த நேரத்தில் தனக்கு கிடைத்த விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆரம்பத்திலேயே இவருக்கு பெரிய பெரிய பிராண்ட் கம்பெனியில் விளம்பரங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அரசாங்க விளம்பரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.


இதன் மூலமே சிவகார்த்திகேயனுடன் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இதையடுத்து, விஜய் டிவியில்  நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுதான் அவருடைய முதல் சீரியலாக அமைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியர்களில் சின்ன சின்ன கேரக்டர் கிடைக்கவும் விடாமல் நடித்துள்ளார்.


தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி எப்போது வீட்டாரிடம் சிக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதனாலயே இந்த சீரியல் விறுவிறுப்பாக நகர்கின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியாக நடிக்கும் நடிகை சல்மா அருண், தற்போது தனது கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி தனது twitter பக்கத்தில் அவருடைய கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி உள்ளார். தற்போது அவரது குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement