• Feb 23 2025

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’! முஸ்லீமாக மாறிய பிக் பாஸ் பூர்ணிமா! புதிய திரைப்படம் இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மூலமாக இயக்குநர் பிரசாத் ராமர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.


‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தைப் பிரபல பாடகர்-இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். 


இந்தப் படம் 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

Advertisement

Advertisement