• Jan 19 2025

சரவெடி ரெடி! மீண்டும் மோதும் அஜித் மற்றும் விஜய்! ஒரே நாளில் ரிலீசாகும் 2 படங்கள்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

அஜித்தின் நடிப்பில் வெளியான வாலி திரைப்படமும் விஜய்யின் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படமும் ரீரிலீஸாகவுள்ளதாக தகவல் வருகின்றன. இந்த தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது


என்னதான் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் திரைத்துறையை பொறுத்தவரை இருவரும் போட்டி நடிகர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக ரசிகர்களால் அஜித் மற்றும் விஜய் போட்டியாளர்களாகத்தான் பார்க்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதின.


நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்தவர்களும் ஆவலாக இருந்தனர். இதைத்தொடர்ந்து வாரிசு மற்றும் துணிவு படங்கள் சமமான வெற்றியை தான் பெற்றன.


இந்நிலையில் தற்போது விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மார்ச் மாதம் முடிவடைந்துவிடும் என்றும், ஜூன் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என்றும் தெரிகின்றது.


மறுபக்கம் அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்படம் மே மாதம் திரையில் வெளியாகும் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அஜித் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவுள்ளார். ஆனால் அரசியலில் களமிறங்கவுள்ள விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.


எனவே இனி அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகாது என ரசிகர்கள் எண்ணியிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் நேரடியாக மோதவுள்ளது. அஜித்தின் வாலி திரைப்படமும் விஜய்யின் காதலுக்கு மரியாதை திரைப்படமும் மீண்டும் ஒரே நாளில் ரீரிலீஸாகவுள்ளது.


இந்நிலையில் இவ்விரு திரைப்படங்களும் பிப்ரவரி 23 ஆம் தேதி மீண்டும் திரையில் மறு வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. சென்னையில் இருக்கும் பல திரையரங்கங்களில் இப்படம் ரீரிலீஸாகவுள்ளது. சமீபகாலமாக ரீரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டாகி வருகின்றது.

Advertisement

Advertisement