• Jan 19 2025

பம்பாய்ல Bhai ஆளே வேறடா....! ஃபயர் ஸ்பீட்டில் வெளியான ’லால் சலாம்’ டிரைலர்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ’லால் சலாம்’. 

இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, ரஜினி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.


லால் சலாம் ட்ரெய்லரில் முக்கியமாக, தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் கோவில் வண்டி காரணமாக நடக்கும் வகுப்புவாத மோதல்களை மையமாகக் கொண்டுள்ளது. 

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போராடினாலும் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் காட்டப்படுகிறார்கள்.

அதன் பின்னர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய் என்று அறிமுகப்படுத்துகிறது ரெய்லர். பம்பாயில் இருந்து செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த மனிதராகவும், அனைவரையும் சமாதானம்  செய்யும் நபராகவும் ரஜினி சித்தரிக்கப்படுகிறார்.

ட்ரெய்லரில் உள்ள காட்சிகள், லால் சலாம் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும்  அதிகரிப்பதோடு, அதில் வகுப்புவாத கலவரங்களால் ஏற்படும் வன்முறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் செந்தில், ஜீவிதா,தம்பி ராமையா,அனந்திகா சனில்குமார்,விவேக் பிரசன்னா, மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 



Advertisement

Advertisement