• Feb 23 2025

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வைரலாகும் Deleted சீன்.. பிணமாக கிடக்கும் கூல் சுரேஷ்! நிழல்கள் ரவி மாஸ்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. 

கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியிருந்தார். டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் - கார்த்திக் யோகி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாள் உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், படத்தில் இருந்து நிழல்கள் ரவி மற்றும் கூல் சுரேஷ் நடித்த டெலிட்டட் சீன் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


அதாவது, டிக்கிலோனா படத்திலேயே கேஜிஎஃப் ரேஞ்சுக்கு நிழல்கள் ரவியை பில்டப் கொடுத்து விட்டு கடைசியில் அவரை பைத்தியமாக மாற்றி காமெடி செய்திருப்பார்கள். 

இவ்வாறான நிலையில் , உடல் முழுக்க வெடி குண்டுகளை கட்டிக் கொண்டு மேஜர் என்கிற கதாபாத்திரத்தில் அவர் செய்யும் கமெடிகள் வேற லெவல் ரகளை தான். 

கூல் சுரேஷ் செத்த பிணமாக நடித்துள்ள நிலையில், அவரை கொண்டு போய் அடக்கம் பண்ணிவிட்டு வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்யும் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement