• Jan 18 2025

தெலுங்கிற்கு பாகுபலி; தமிழ் சினிமாவுக்கு கங்குவா.! பிரபல இயக்குனர் விடுத்த வேண்டுகோள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால கடின உழைப்பிற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் கங்குவா. இதில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

கங்குவா படம் வெளியானதில் இருந்து இந்த படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றார்கள். இணையத்திலும் படுமோசமாக கங்குவா படம் பற்றியும் சூர்யா பற்றியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

d_i_a

கங்குவா படத்தை தியேட்டர்களில் பார்த்துவிட்டு வெளியில் வரும் ஒரு சில ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனம் அளித்து வந்தாலும் ஒரு சிலர் அளிக்கும் நெகட்டிவ் விமர்சனம் இணையத்தில் படு வைரல் ஆகின்றன. அத்துடன் பெண்கள் கூட கங்குவா படத்திற்கு எதிராக ரிலீஸ் வெளியிட தொடங்கியுள்ளார்கள். இது சூர்யா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், பிரபல இயக்குனர் சுசீந்திரன் கங்குவா படம் பற்றி அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், கங்குவா படத்தை நான் எனது பிள்ளைகளுடன் சென்று பார்த்தேன். படம் மிகவும் அற்புதமாக இருக்குது. தெலுங்கு சினிமாவுக்கு பாகுபலி என்றால் தமிழ் சினிமாவுக்கு கங்குவா.

கங்குவா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு, உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது. உலக தரம் வாய்ந்த படத்தை காலம் தாழ்த்திக் கொண்டாடி விடாதீர்கள் என சுசீந்திரன் ரசிகர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவர் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement