• Dec 07 2024

பிரபுதேவா காதல் கதை ! தனுஷ்-சிம்புவை மறந்த நயன்! திட்டமிட்டு செய்த வேலையா இது!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தற்போது ஹாட் டாபிக்கே நம்ம நயன்தாராவின் ஆவணபடம் தான். திருமணம் ஆகி ஓரிரு வருடங்களுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ நயன்தாராவின் ஆவணப்படமாக நேற்று நயனின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியானது. 


இதை நயன் குடும்பம் உட்பட ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க திடீரென நடிகர் தனுஷ் நஷ்ட்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது என்னடா என்று பார்த்தால் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்த சில வீடியோக்களை பயன்படுத்தியது குற்றம் என குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபமான நயன் தனுஷ் மீது குற்றம் சாட்டி மீடியாவில் பதிவிட்டிருந்தார். இது தற்போது சோசியல் மீடியாக்களுக்கு நல்ல விருந்தாக அமையவே அதனையே வைத்து பலவாறு பேசி விடீயோக்கள் செய்திகள் போட்டு வருகின்றனர். 


இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி அனைவரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தில் கல்யாண சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே காட்டப்படுகிறது. இது முழுக்க முழுக்க அவரது சுயசரிதை குறும்படமாக அமைந்துள்ளது.


கல்யாண ஆவணப்படத்தில் நயன்தாரா 20 வருட சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்றதையும், லேடி சூப்பர் ஸ்டாராக மாறியதையும் காட்டுகிறார்கள். இந்த வீடியோவில் நயன்தாரா சினிமா கேரியரில் பிரபுதேவா, சிம்பு, தனுஷ் மூன்று பேரும் முக்கிய பங்காற்றியவர்கள். ஆரம்பத்தில் நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தார். கல்யாணத்துக்குப் பிறகு பிரபுதேவா நயன்தாரா நடிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போட்டதால் அவரிடம் தொடர்பை துண்டித்துக் கொண்டார். இதைக் கூட அவரது ஆவணப்படத்தில் காட்டுகிறார்.


சிம்பு, தனுஷ் பற்றிய குறிப்புகள் அதில் இல்லை. நயன்தாரா சினிமாவில் இந்த இடத்திற்கு வர முக்கிய காரணமாய் இருந்தவர் சிம்பு. இவர்களின் பழக்கம் வீடு வரைக்கும் செய்றது ஆனால் அது ஈகோ பிரச்சனையால் முடிவுக்கு வந்தது. நயன்தாரா, தனுஷ் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. யாரடி நீ மோகினி படம் இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரியை ஏற்படுத்தினாலும் கிசுகிசுகளோடு அது முடிவடைந்தது. இந்த படத்தில் ஏற்பட்ட நெருக்கம் நயன்தாரா, தனுசை வீட்டிற்கு அழைத்து செல்லும் அளவிற்கு உண்டானது.  இதனையெல்லாம் அந்த ஆவணப்படத்தில் சொல்லாதது ஏன்? என நெட்டிசன்கள் கேள்விக்கணைகளை போட்டு வருகிறார்கள். இது குறித்து நயன் பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement