• Jan 18 2025

கஸ்தூரி போல கம்பி எண்ணணுமா? யாரும் சொல்லாத விஷயத்தை சொன்ன ஜோதிகா??

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பற்றிய கருத்துக்கள் தான் சமூக வலைத்தள பக்கங்களில் பரவலாக காணப்படுகின்றன. இந்த படம் தொடர்பில் பல பிரபலங்களும் அளித்த பேட்டிகள் மற்றும் ரசிகர்கள் அளித்த நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றிய கருத்துக்களும் வேகமாக பரவி வருகின்றன.

கங்குவா திரைப்படம் வரலாற்று கதை அம்சம் கொண்ட  பிரம்மாண்ட படமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் இந்த படம் வெளியானதில் இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிய தொடங்கின.

இதை தொடர்ந்து சூர்யாவின் மனைவி ஜோதிகா படம் பற்றியும் சூர்யா பற்றியும் பெருமையாக பேசி பதிவிட்டிருந்தார். அதன் பின்பு ஜோதிகாவை ஏன் சூர்யா திருமணம் செய்து கொண்டார்? படிப்பறிவு இல்லாத கழுதை அவ என்று கண்டபடி பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார் பாடகி சுசித்ரா.

d_i_a

இந்த நிலையில், கங்குவா படம் தொடர்பில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை கொடுத்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் ஜோதிகா பங்கு கொள்ளவில்லை. அதைப்போல மும்பையிலும் பட ப்ரோமோஷன் நடந்தது. அதிலும் ஜோதிகா பங்கு கொள்ளவில்லை. 

இப்படி எதிலும் கலந்து கொள்ளாத ஜோதிகா திடீரென்று கங்குவா  நல்லா இருக்கு. அதை சில விஷமிகள் விமர்சனம் செய்றாங்க அப்படி என்று சொல்லி இருக்கிறது எந்த வகையில நியாயம்.


ஜோதிகா சொல்லும் அளவிற்கு கங்குவா படத்தை யாரும் விமர்சனம் செய்யல. ஒரு சிலர் தான் சரி இல்லன்னு சொல்றாங்க. மத்தவங்க எல்லாருமே நல்லா இருக்கு என்று தான் சொல்லி இருக்காங்க. ஆனால் ஜோதிகா தான் தான் வெளியிட்ட அறிக்கையில் அரை மணி நேரம் பட நல்லா இல்ல அப்படி என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருக்காங்க. யாரும் சொல்லாத விஷயத்தை சொன்னதே ஜோதிகா தான்.


மாமனாரோடு சண்டை இதனால் பட ப்ரொமோஷனுக்கு வரவில்லை. ஆனால் மும்பையில் நடந்த ப்ரொமோஷன்ல கலந்து கொண்டு இருக்கலாம். சூர்யா மீது அக்கறை இருந்தால் நிச்சயம் கலந்து கொண்டு இருப்பார். ஆனால் அவருக்கு அக்கறையே இல்லை.

இன்னொரு பக்கம் சர்ச்சை நாயகி சுசித்ரா ஜோதிகாவை கண்டபடி திட்டி உள்ளார். தேவையில்லாத வேலையை செய்கின்றீர்கள். ஜோதிகா பிரபல நடிகை. மும்பையில் பல கோடி சொத்து .சென்னையில் பல கோடி சொத்து இருக்கு. ஆனா அவரை பிச்சைக்காரி என்று சுசித்ரா சொல்லி உள்ளார். இது தொடர்பில் ஜோதிகா வழக்கு தொடர்ந்தால் கஸ்தூரி போல சுசித்ராவும் ஜெயிலுக்கு போக வேண்டியது தான்.

சூர்யாவின் குடும்பம் எந்த பிரச்சினைக்கும் போகாமல் அமைதியாக உள்ளது. அவர்களின் குடும்பம் பற்றி பேசுவது சுசித்ராக்கு தேவை இல்லாத ஒன்று. மன நோயாளி என்றால் இப்படித்தான் பேசுவார் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement