உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மீண்டும் திரைக்கு வரத் தயாராகின்றனர். மார்வெல் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன என்று படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் (Russo Brothers) இந்த புதிய அத்தியாயத்தையும் இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் டோனி ஸ்டார்க் எனும் ஐரன் மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் திரும்பி வருகிறார் என்பது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம்.
மேலும், ‘பிளாக் பாந்தர்: வாகாண்டா பார்எவர்’ படத்தில் ஷூரி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லெட்டிடியா ரைட், இந்த படத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார். இதுவே அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VFX தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த படம், 14 மாத கால post production பணிகளை கடந்து, 2026-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புதிய அப்டேட்கள், டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக MCU ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!