• Jan 19 2025

நடுரோட்டில் குடித்துவிட்டு தவெக கட்சியினர் செய்த அட்டூழியம்..! நடுங்கிய ஊழியர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தனக்கு  இருக்கும் பிரபலத்தையும் கோடிக்கணக்கான சம்பளத்தையும் விட்டு மக்களின் பணிக்காகவே அரசியலில் நுழைந்து உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சிறப்பாக கொண்டு நடத்தி வருகின்றார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் 500 கோடிகளை வசூலித்து இருந்தது. இதைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியல் பக்கம் முழு நேரமாகவே பயணிக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் மும்முரமாக நடைபெற்று வருவதோடு களத்தில் மருத்துவப் பணி, தொழில்நுட்ப பணி, பாதுகாப்பு பணி என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்படுகின்றது.


இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சிலர் குடித்துவிட்டு திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் பணம் கொடுக்க முடியாது என அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த வீடியோ வைரலாக இருக்கும் நிலையில் குறித்த வீடியோ உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் பகிரக் கூடாது உண்மை என்ன என்பவற்றை விசாரணை செய்தால் தான் தெரியும் என்று நெட்டிசன்கள் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement