தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகராக இருக்கும் தல அஜித் நடிப்பு மாத்திரமின்றி தனது பேஷன் ஆன கார் ரேசிங்கிலும் கலந்து கொண்டு 3 ஆம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். விபத்தில் சிக்கிய போதும் விடாமுயற்சியுடன் போராடி தனது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள இவரை மக்கள் அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் தற்போது இந்திய அரசாங்கம் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.இவ் விருது தமிழ்நாட்டில் இருக்கும் 13 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விருது கிடைத்தமை தொடர்பில் தற்போது அஜித் தனது குடும்பத்தினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அவ் வாழ்த்தில் " இந்த தருணத்தில் என் அப்பா இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இருப்பினும் அவர் பெருமையாக உணர்வார். என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களை செய்த என் அம்மாவிற்கு நன்றி. 25 ஆண்டுகளாக எனக்கு உற்ற துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கு நன்றி. எனது மகிழ்ச்சி, வெற்றிக்கு காரணமாக திகழ்கிறார்.என் மகள், மகன் மற்றும் என் ரசிகர்களுக்கு நன்றி " என கூறியுள்ளார்.
Listen News!