ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் மாரி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது.
மாரி சீரியல் அமானுஷ்யம் நிறைந்ததாகவும் அதன் கதாநாயகி எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்ட ஒருவராகவும் காணப்படுகின்றார். இதனால் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் பிரச்சனைகள், துர் சம்பவங்கள் என்பவற்றை முன்கூட்டியே அறிந்து அதில் இருந்து தப்பி விடுகின்றார்.
இவ்வாறு இந்த சீரியல் மாந்திரீகம், அமானுஷ்யம், ஆவி, தெய்வம், பாம்பு என பல கோணங்களில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி கூடிய விரைவில் எடுக்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து மாரி சீரியலின் கதாநாயகியான அஷிகா படுகோன் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகி இருந்தார். அவருக்கு பதிலாக மாரி சீரியலில் புதிதாக ரோஜா சீரியல் நடித்த புகழ் பெற்ற பிரியங்கா நல்காரி கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், மாரி சீரியலில் நடித்து வரும் கதாநாயகனான நடிகர் அட்ரஸ் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எனவே இனிவரும் நாட்களில் புதிய ஹீரோ புதிய ஹீரோயின் உடன் மாரி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!